வியாழன், 30 ஏப்ரல், 2015

ஆறகழூர் ..மும்முடி ..தலைவாசல்,மூவேந்தர்கள்,அவ்வையார்


ஆறகழூர் ..மும்முடி ..தலைவாசல்,மூவேந்தர்கள்,அவ்வையார்

-----------------------------------------------------------------------------------------














ஆறகழூரில் இருந்து 5 கி.மீ தொலைவிலும் தலைவாசலில் இருந்து ஒரு கி.மீ தொலைவிலும் உள்ள ஊர் மும்முடி..ஆறகழூருக்கும் தலைவாசலுக்கும் இடையே உள்ள இந்த மும்முடி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்..மகதை தலைநகரான ஆறை(ஆறகழூர்)க்கு நுழைவாயிலாக இருந்ததால் அந்த இடம் தலை வாசல் என பெயர் பெற்றது....
வசிஷ்ட நதிக்கரையில் உள்ள தலைவாசல் மும்முடிக்கும் ஒளவை பாட்டிக்கும் உள்ள தொடர்பை பழங்கதை ஒன்று தெரிவிக்கிறது..
ஒரு முறை சேர,சோழ,பாண்டிய மன்னர்களுக்கிடையே எல்லைபிரச்சினை வந்த போது...எல்லைகளை தீர்மானிக்க அவ்வையை வேண்டினார்களாம்..அவ்வை மூவேந்தர்களையும் இவ்விடத்தில் சந்திக்கவைத்து பிரச்சினையை தீர்த்தாராம்...
இதற்க்கு ஆதாரமாக இன்றும் மும்முடியில் வசிஷ்ட நதியின் கரையில் மும்முடியாண்டவன் கோயில் இருக்கிறது...
1970 களில் ஏற்ப்பட்ட வெள்ளத்தின் போது இக்கோயிலுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளிருந்த சிலைகள் பலவற்றை அடித்து சென்று விட்டது..இப்போது இது மும்முடியான் அய்யானார் கோவிலாக வழிபாட்டில் உள்ளது....
இந்த கோயிலுக்கு அருகேதான் பல நூற்றாண்டுகளுக்கு முன் வஷிஷ்ட நதியில் சிறிய கல்லணை கட்டி தண்ணீரை திருப்பி ஆறகழூர் ஏரி,தியாகனூர் ஏரிக்கு தண்ணீர் வர வழி செய்யப்பட்டுள்ளது..
மூவேந்தர்கள்,அவ்வையார்,மும்முடியான் கோவில் ,வசிஷ்ட நதி தடுப்பணை இவை அனைத்தும் முமமுடியின் பெயரோடு தொடர்புடையவை,,

புதன், 29 ஏப்ரல், 2015

தச்சூர்-, பல்லவர் கால சிலைகள்




விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் கிராமத்தில் உள்ள சிற்பம்..புதிய கோவில் கட்டும் பணி நடப்பதால் பராமரிப்பின்றி உள்ளது..விரைவில் கோயில் அருகே ஒரு ஷெட் அமைத்து இந்த சிலைகளை நிறுவப்போவதாக ஊர் மக்கள் கூறினர்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

தச்சூர்-சோமாஸ்கந்தர், பல்லவர் காலம்






விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் கிராமத்தில் உள்ள சோமாஸ்கந்தர்..புதிய கோவில் கட்டும் பணி நடப்பதால் பராமரிப்பின்றி உள்ளது..விரைவில் கோயில் அருகே ஒரு ஷெட் அமைத்து இந்த சிலைகளை நிறுவப்போவதாக ஊர் மக்கள் கூறினர்

திங்கள், 27 ஏப்ரல், 2015

aragalur-அரசினர் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டட திறப்பு விழா






சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நான் 2008ல் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளராக பொறுப்பு வகித்தபோது நபார்டு வங்கியின் உதவியோடு கட்டப்பட்ட வகுப்பறைகள் அப்போதைய மாநில அமைச்சர் திரு வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் தலைமையில் தலைவாசல் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னதுரை அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்ட கல்வெட்டு

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

aragalur-ஆறகளூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர்








சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பல்ளியில் மேற்குப்புறம் 2014 ஆம் ஆண்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதற்கு நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல்..இதற்கு நான் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

aragalur-ஆறகழூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி முப்பெரும் விழா





சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.ஆசிரியைகள் குத்து விளக்கு ஏற்றும் காணொளி

வியாழன், 23 ஏப்ரல், 2015

aragalur-ஆறகழூர் சோழீசுவரன் மூலவர்




சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கிராமத்தில்(மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் மகதை மண்டல மன்னன் வாணகோவரையன் கட்டிய கோயில்)உள்ள சோழீசுரன் கோயில் மூலவர்

aragalur-ஆறகழூர் தியாகனூர் 9 அடி புத்தர் சிலை







சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அருகே உள்ள தியாகனூரில் உல்ள 9 அடி உயரமுள்ள புத்தர் சிலை..இது தமிழகத்திலே பெரிய சில என நம்பப்படுகிறது..

aragalur-ஆறகளூர் கல்வெட்டுக்கள் எண் 33

கீழ் வரும் இந்த கல்வெட்டில் தேவதானக் குடிமக்களாகத் தந்தோம்------இதன் பொருள் கொஞ்சம் சொல்லுங்க..சார்
-------------------------------------------------------------------------------------------------------------

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள காமநாதீஸ்வரர் (திருகாமீசுரமுடையநாயனார்) கோயிலில் உள்ள கல்வெட்டு எண் 33

-------------------------------------------------------------------------------------------------
ஊர்:ஆறகளூர் வட்டம்:ஆத்தூர்
திருகாமீசுரமுடையநாயனார் கோவில் வெளிச்சுற்றின் தென் புற சுவர்
அரசர் : பாண்டியன் இரண்டாம் சடையவர்மன் சுந்தரன்
காலம்: கி.பி.1287
மொழி:தமிழ் க.ஆ.அ. 138-1913
செய்தி :அரசன் சுந்தரபாண்டியன் கோயிலுக்குபுதிதாக குடிமக்களைக் குடியேற்றிய செய்தியை குறிக்கிறது..

கல்வெட்டு ;
1. ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் ஆற்றூ ர்க் கூற்றத்து ஆறகளூர் உடையார் திருக்காமீசுரமுடைய நாயனார் கோயில்ந் தானத்தார்க்கு

2. ஆறகளூர் வடக்கு வாசலுக்குப் புறம்பு தாங்கள் ஏறுவித்த தந்துவாய்க் குடிமக்களை பத்தாவது ஆனிமாதம் இக்கோயில்க் கண்

3, டியதேவர் எழுந்தருளிவித்த குலசேகர ஆவுடையார்க்கு தேவதானக்
குடிமக்களாகத் தந்தோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபா 

4. டாகக் கொண்டு தேவதானக் குடிமக்கள்க்சந்திராதித்தவற் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கடமை போக(போக்கறு)

5. ப்பித்துக் கொள்க இப்படிக்கு இவை பண்டி மண்டலத்து முத்தூர்க்
கூற்றத்துக் கப்பலூர் ஆன உலகளந்தசோழநல்லூ ர் ஆதித்

6. த கணபதியாழ்வானான காடுவெட்டு எழுத்து

புதன், 22 ஏப்ரல், 2015

aragalur-ஆறகழூர் தியாகனூர் புத்தர் சிலை





தமிழ்நாடு-சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அருகே உள்ளது தியாகனூர்.5ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக கருதப்படும் இந்த புத்தர் சிலை பல நூற்றாண்டுகளாக வயல் வெளியில் கிடந்தது..சேலம் மாவட்ட ஆட்சியர் திரு மகரபூசனம் அவர்கள் முயற்சியால் 2013ஆண்டு இந்த புத்தர் தியான மண்டபம் கட்டப்பட்டது.

aragalur-அரசினர் மேல்நிலைப்பள்ளி




சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெகன் பேசியபோது.

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

வடசென்னிமலை தேர் திருவிழா காணொளி காட்சி






சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அருகே உள்ள வடசென்னிமலை பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடந்த தேர் திருவிழா

போயர் சமூகத்தார் சாமி கும்பிட ஊர்வலமாய் சென்றபோது இசைக்கப்பட்ட பறை ஒலி

ஆறகழூர் கல்வெட்டுக்கள்

...நான் கல்வெட்டுக்களை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவன்..








ஆனால் கல்வெட்டுக்களில் உள்ள செய்திகளை அறியும் ஆர்வம் உண்டு..சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் என் சொந்த ஊர்.11 ,12 ஆம் நூற்றாண்டில் வாணகோவரையர்கள்(பொன்பரப்பின வாணகோவரையன்) ஆறகழூரை தலைநகராய் கொண்டு ஆட்சி செதுள்ளனர் ..எங்கள் ஊர் காமநாதீஸ்வரர் கோவில்,கரிவரதராஜபெருமாள் கோவில்,சோழீசுரன் கோவில் போன்றவற்றில் மொத்தம் 48 கல்வெட்டுக்கள் உள்ளன..நிலதானம் அரசியல் உடன்படிக்கைகள் போன்றவை உண்டு..சோழர்.பாண்டியர்,விஜயநகர பேரரசு கல்வெட்டுக்கள் உள்ளன..நவகண்டம் 6 நடுகற்களும் உள்ளன..இதுமட்டுமன்றி..துண்டு கல்வெட்டுக்களும் ஆங்காங்கே உள்ளன...எங்கள் ஊர் அருகே  தியாகனூரில் 9 அடி மற்றும் 6 அடி உயர புத்தர் சிலைகளும் உள்ளன...என் ஊர் ஆறகழூரின் வரலாற்றை அறிந்து வெளிப்படுத்தவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாய் உள்ளது. ஒரு மாதம் முன் சூலக்கல் ஒன்றை கண்டுபிடித்தேன்..அதில் கல்வெட்டுக்களும் ப்ன்றி..மற்றும் சில விலங்கு உருவங்கள் உள்ளன..அக்கல்வெட்டை என்னால் படிக்க முடியவில்லை.....எங்கள் ஊரை ஆய்வு செய்து கல்வெட்டுக்களை படித்து உதவி செய்ய உங்களால் முடியமா...?வரலாறு அழிந்து விடகூடாது என்ற ஆவலில் பொன்.வெங்கடேசன் ஆறகழூர்..கைபேசி என் 9047514844....

திங்கள், 20 ஏப்ரல், 2015

போயர் சாமி கும்பிடுதலின் போது பறை ஒலி


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கிராமத்தில் போயர் சமூகத்தார் சாமி கும்பிட ஊர்வலமாய் சென்றபோது இசைக்கப்பட்ட பறை ஒலி

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

தமிழகத்தில் நடுகல் சதிகல் வழிபாடு

தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு!
ஆய்வாளர் இல. கணபதிமுருகன்


மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் பயத்தின் அடிப்படையில் எழுந்தன.

  • இடி,
  • மின்னல்,
  • மழை,
  • சூரிய வெப்பம்,
  • கொடிய விலங்குகள்
ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன. இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய் எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின் (Totemism)அடையாளமாக விளங்கின. இறைவனென்று கொண்டவற்றுக்குப் படையல்கள், பலிகள் இட்டு வழிபட்டனர். இயற்கை வழிபாடு உருவ வழிபாடாக வளர்ச்சியடைந்து நிலைத்தது. எனினும் நடுகல் வழிபாடு மற்றும் சதிகல் வழிபாடு போன்றவையும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன.

நடுகல் வழிபாட்டின் தோற்றம்:

கற்களை அடையாளமாக நடுவதால் "நடுகல்" எனப்பட்டது. இம்முறை ஒரு வகையில் சிவநெறியில் லிங்கத்தை நடுவது போன்றதாகும். நடுகல் நாட்டுப்புற முறையாகவும், பள்ளிப்படைகோயில் (மன்னர்கள் இறந்த இடத்தில் கல்நட்டு கோயில் எழுப்புதல்) அரசபாணியாகவும் கருதப்பட்டது. சங்க காலத்தில் தன்னால் இயன்றவரையில் போர்புரிந்து உயிர்விட்ட வீரனது உடலைப் புதைத்த இடத்தில் (அ) எரித்த இடத்தில் ஒரு கல்லை நடுவர். அக்கல்லில் அவனது உருவத்தையும், பெயரையும் இன்னபோரில், இவ்வாறு போர்புரிந்து மாண்டான் என்ற விவரத்தையும் பொறிப்பர். இக்கல்லே நடுகல் எனப்படும்.
கற்குவைகளால் மூடப்பட்ட நடுகல், "கற்பதுக்கை" என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. போரில் ஈடுபடும் வீரர்கள் வெற்றிவாகை சூடி வரவேண்டுமென்று அவர்தம் மனைவிமார்கள் தம் குடி முன்னோரின் நடுகல் முன் அமர்ந்து வழிபட்டனர். நன்னனுடைய மலைகள் மீது இத்தகைய நடுகற்கள் அதிகளவில் இருந்தன. அவ்வழியாகச் சென்ற கூத்தர், பாணர் போன்றோர் யாழ் வாசித்து அத்தகைய நடுகல் வீரர்களை வழிபட்டுச் சென்றனர்.
நடுகல் எடுப்பு விழா:

நடுகல் எடுப்பு விழா அறுவகைப்படும். அவை:-
  1. கற்காண்டல்,
  2. கால்கோள்,
  3. கல்லை நீர்ப்படுத்துதல்,
  4. கல்லை நடுதல்,
  5. வீரன்-பெயர்-செயல் பொறித்தல்,
  6. கால் கொண்ட தெய்வத்திற்கு சிறப்பு செய்து வாழ்த்துதல்.
செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்தமை இதே மரபினதாகும்.

நடுகல் வணக்கத்தின் பொருள்:

"தாய்நாட்டின் பொருட்டு போரிட்டு உயிர்நீத்த வீரத்தமிழனுக்கு நினைவுக்கல்லை நட்டு அவ்வீரனை போற்றுதல்," அவனை சான்றாகக்கொண்டு மற்ற தமிழர் நடக்கமுயலல், அவனது புகழ் உலகம் உள்ளளவும் நிலவுக! என்பனவேயாகும். வீரர்கள் மட்டுமல்லாது, விலங்குகளின் நினைவாகக்கூட நடுகற்கள் நடப்பட்டன. காளைகளின் நினைவாக நடப்பட்ட நடுகற்கள் தும்கூர் (கர்நாடக மாநிலம்) மாவட்டத்தில் அதிகளவில் காணப்படுகின்றன. தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானுக்கு அருகிலுள்ள குப்புக்குறிச்சி என்னுமிடத்தில் "பசுக்கூட்டம்" என்றழைக்கப்படும் இத்தகைய நடுகற்கள் காணப்படுகின்றன.

தமிழகத்தின் முதல் நடுகல் கண்டுபிடிப்பு:

எகிப்து நாட்டில் பிரமிடுகள் எவ்வாறு வரலாற்றுச் சின்னங்களாகத் திகழ்கின்றனவோ, அதே போன்று தமிழகத்தில் "நடுகல்" திகழ்கிறது. இவ்வாறு எழுப்பப்பட்ட நடுகல்லை முதலில் கண்டெடுத்தவர் பேரா.சுந்தரம் பிள்ளை. ஆரல்வாய்மொழியை (கன்னியாகுமாரி மாவட்டம்) அடுத்துள்ள கோட்டைக்கரையில் பாண்டிய மன்னன் மாறன்சடையனின் (கி.பி 765-790) காலத்தில் வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட ஒரு நடுகல்லை பேராசிரியர் கண்டறிந்தார். இரணகீர்த்தி (மாறன் சடையனின் படையைச் சேர்ந்தவன்) என்ற வீரனது நினைவாக நடுகல் நடப்பட்டிருப்பதை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பல நடுகற்கள் தமிழகம் முழுவதும் வரலாற்றாளர்களால் கண்டறியப்பட்டன.

நடுகல் முறையின் சிறப்புகள்:

போரில் இறந்தவர் அல்லாமல், அறிவிலும் ஒழுக்கத்திலும் மிக்கார் நினைவின் பொருட்டு "கல் எடுத்தலும்" உண்டு. சங்கச் செய்யுள் ஒன்றில் மங்கையின் வீரம் பற்றிக் கூறும் போது, "எந்தை, முன் நடந்த போரில் இறந்துபட்டு கல் ஆனான்" என மங்கையின் கூற்றாகப் புலவர் குறிக்கிறார். "பன்றிகுத்திப்பட்டான் கல்" என்பது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு நடுகல்லாகும்.

சதிகல் வழிபாடு: 
நடுகல் வழிபாட்டிற்கும் சதிகல் வழிபாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கணவனது இறப்பினை அறிந்தவுடன், தீப்பாய்ந்து இறக்கும் பெண்களின் நினைவாக நடப்படும் கல் "சதிகல்" எனப்பட்டது. மணிமேகலையில் பத்தினிப்பெண்டிர் மூவகையினராகப் பிரிக்கப்படுகின்றனர்.

  • கணவனுடன் எரிமூழ்கி இறப்பவர் முதலாமவர்,
  • தனியே எரிவளர்த்து அதனில் வீழ்ந்து இறப்பவர் இரண்டாமவர்,
எஞ்சியவர் கணவனை நினைத்து அடுத்த பிறவியில் அவனுடன் வாழ்வதற்காக, கைம்மை நோன்பு நோற்பர்.
ரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் "சதி" பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உடன்கட்டை ஏறும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ரிக். 10.18.8: அத.28,3.1) இதன் வாயிலாக உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் பழைமையை உணரலாம்.

மன்னர்தம் ஆதரவு: 

சேரன் செங்குட்டுவன் கி.பி 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். சேரன் செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மறைந்தபோது, குலவழக்கப்படி நெடுஞ்சேரலாதனின் மனைவியான "நற்சோணை" என்ற சோழ மகள் உடன்கட்டை ஏறினாள். செங்குட்டுவன் தன் தாயாரின் நினைவாக கோயில் எடுக்க எண்ணி, இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்து கோயில் எடுத்தலே சிறப்பு எனக்கருதி இமயத்தின் மீது படையெடுத்து கல்லெடுத்து கங்கையில் நீராட்டி நாடு மீண்டான். "நற்சோணையம்மன்" சேரர் குலதெய்வம் ஆனாள். தீப்பாய்ந்து இறந்த மறப்பெண்டிர் வம்சத்தார்க்கு மன்னர்களும், செல்வந்தர்களும் நிலங்களைத் தானமாக வழங்கினார். அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள்
  • உதிரப்பட்டி,
  • ரத்தக்காணி,
  • தீப்பாஞ்சகாணி
எனக் குறிக்கப்பட்டன.

பத்தினித் தெய்வ வழிபாடு: 
உடன்கட்டை ஏறிய பெண்கள் பத்தினித் தெய்வமாகவும் வணங்கப்பட்டனர். கோவலனை இழந்த கண்ணகி மதுரையை விட்டுப் புறப்பட்டு வைகைக்கரை வழியே ஆவேசமாகச் சென்றாள், பின்னர் வருஷநாடு மலைவழியாக சுருளிமலையின் மேற்குத் தொடர்ச்சியான மங்கலதேவி மலைக்கு வருகிறாள், கண்ணகி, தெய்வமான இடம் இதுவேயாகும். சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் நினைவாக இவ்விடத்தில் கோயிலை உருவாக்கினான்.

பத்தினித் தெய்வ வழிபாட்டின் பரவல்: 

முதலாம் இராசராசன், மங்கலதேவி கோட்டத்திற்கு வந்து கண்ணகியின் சிறப்பை உணர்ந்து, திருப்பணி செய்ததோடு மட்டுமல்லாது, பிடிமண் எடுத்துச் சென்று தஞ்சையில் பத்தினித் தெய்வ வழிபாட்டைத் தொடங்கி வைத்தான். இக்கோயில் சிங்கள நாச்சியார் - செங்கள நாச்சியார் என்று வழங்கி பின் செங்களாச்சியம்மன் கோயிலாக தற்போது உள்ளது.
யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கண்ணகிக்குக் கோயிலமைத்த இடம் "அங்கணக்கடவை" எனப்படும்.

சிங்களநாட்டில் "பத்தினி தெய்யோ" என வணங்கப்படும் தெய்வம் கண்ணகியே என்பது இலங்கையின் வரலாற்றாளரான செ. இராசநாயகத்தின் கருத்தாகும்.

நடுகல் வழிபாடும், சதிகல் வழிபாடும் இன்றைய காலகட்டத்தில் சிறுதெய்வ வழிபாடுகளாக மக்கள் மத்தியில் நிலைபெற்றுவிட்டதாகவே கூறவேண்டும். நன்றி:- தமிழ்மணி (தினமணி)
 

 


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள 6 நடுகற்கள்  (நவகண்டம்)






வெள்ளி, 17 ஏப்ரல், 2015

kukaiyur sornapuriswarar temple






சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அருகே உள்ள கூகையூர் (விழுப்புரம் மாவட்டம்) சொர்ணபுரீஸ்வரர் கோவில் பட தொகுப்பு

புதன், 1 ஏப்ரல், 2015

aragalur-ஆடல் பாடல் நிகழ்சி-ஆறகழூர்



சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கிராமத்தில் நடந்த அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி சேலம் நியூ அமுதகானம் குழுவினர் வழங்கிய ஆடல் பாடல் நிகழ்சியின் காணொளி காட்சி

aragalur-ஆடல் பாடல் நிகழ்சி-ஆறகழூர் காணொளி காட்சி3



சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கிராமத்தில் நடந்த அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி சேலம் நியூ அமுதகானம் குழுவினர் வழங்கிய ஆடல் பாடல் நிகழ்சியின் காணொளி காட்சி

aragalur-ஆடல் பாடல் நிகழ்சி-ஆறகழூர் காணொளி காட்சி3




சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கிராமத்தில் நடந்த அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி சேலம் நியூ அமுதகானம் குழுவினர் வழங்கிய ஆடல் பாடல் நிகழ்சியின் காணொளி காட்சி

aragalur-ஆடல் பாடல் நிகழ்சி-ஆறகழூர்




சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் அங்காளம்மன் திருவிழாவை முன்னிட்டு சேலம் நியூ அமுதகானம் குழுவினர் வழங்கிய ஆடல் பாடல் நிகழ்சி.

aragalur-ஆடல் பாடல் நிகழ்சி-ஆறகழூர் ஆர்கெஸ்ட்ரா


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் அங்காளம்மன் திருவிழாவை முன்னிட்டு சேலம் நியூ அமுதகானம் குழுவினர் வழங்கிய ஆடல் பாடல் நிகழ்சி.