செவ்வாய், 27 ஜூன், 2017

அய்யனார் சிற்பம்

வசிஷ்ட நதியில், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது.














சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று, மாரியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கினர். அப்போது சாந்தி, 35, என்பவருக்கு அருள் வந்தது. அவர், 'கெட்டிமுதலி கோட்டை அருகே உள்ள வசிஷ்ட நதியில், புதைந்து கிடக்கும் சிலையை மீட்டால், மழை வரும்' என்றார். மதியம், 2:00 மணிக்கு, 30க்கும் மேற்பட்ட பெண்கள், பூஜை பொருட்கள், சேவல் கோழியுடன், சம்போடை வனம் அருகே, வசிஷ்ட நதிக்கு வந்தனர். பொக்லைன் மூலம், அங்கு பள்ளம் தோண்டியபோது, உருவம் இல்லாத உருளையான ஒன்றரை அடி உயரத்தில் கல் கிடைத்தது. அதற்கு பூஜை செய்து, கோழியை பலி கொடுத்தனர். இதையடுத்து, அங்கிருந்த மதுரகாளியம்மன் கோவில் பூசாரி ராஜாமணி, 60, 'ஆற்றின் கரை பகுதியொட்டி, ஆறு அடி ஆழத்தில் சிலை இருந்ததாக நினைவுள்ளது' என்றார். அந்த இடத்தை தோண்டியபோது, மூன்று அடி உயரம், இரண்டு அடி அகலத்தில், அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வன் தலைமையிலான அதிகாரிகள், அய்யனார் சிலையை, தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து, தொல்பொருள் ஆய்வாளர் ஆறகளூர் வெங்கடேசன் கூறியதாவது: ஆத்தூர் வசிஷ்ட நதியில் கண்டெடுக்கப்பட்டது, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை. மனைவியர் இன்றி தனிச்சிற்பமாகவும், கழுத்து, கை, காது உள்பட உடல் பகுதியில் அதிக அளவில் ஆபரணம் உள்ளது. கையில் செங்கோல், பெரிய ஜடாபாரம் (தலையில் உள்ள முடி), இடது கால் மடக்கியும், வலது கால் தொங்கவிட்டபடி, சிலை நேர்த்தியாக உள்ளது. இச்சிலையை பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

குரங்கு


தாவும் குரங்கு









  1. இது வரை நான் எடுத்த புகைப்படங்களில் தற்செயலாக கிடைத்த விசயங்கள் இரண்டு ஒன்று அணில்களின் இனச்சேர்க்கை .அதை ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.
    சில நாட்களுக்கு முன்பு வளையமாதேவி அருகேயுள்ள மலை அடிவாரத்தில் உள்ள குன்னுடையான் என்ற கோயிலை பார்க்க நண்பர் கந்தசாமியுடன் சென்றிருந்தேன். பைக்கை நிறுத்திவிட்டு பார்த்தபோது அடர்ந்த மரங்கள் நடுவே ஏராளமான குரங்குகள் அம்ர்ந்திருந்தன..நாங்கள் கோயிலை சுற்றிப்பார்த்துவிட்டு வந்தவடன் பார்த்தால் பைக் டேங்கிலிருந்த தண்ணீர் பாட்டலை காணவில்லை ,எல்லா பொருட்
    களும் வெளியே எடுத்து வீசப்பட்டிருந்தன...சரி போ..என விட்டு விட்டு அடுத்த மரத்தை பார்த்தேன்..அங்கு இரண்டு குரங்குகள் இருந்தன.தொலைவில் இன்னொரு மரம் பார்த்துக்கொண்டிருந்த போதே ஒரு குரங்கு வெகு தொலைவில் உள்ள மரத்துக்கு தாவியது, மற்றொரு குரங்கு தாவ தயாராகும் போதே காமிராவை எடுத்து கிளிக்கினேன். இரண்டு மரங்களுக்கு நடுவே குரங்கு பறப்பது போல் ஓர் தோற்றம்....
    புகைப்படத்தை பெரிது செய்து பாருங்க
    #ஆறகழூர்பொன்வெங்கடேசன்



ஆணி செருப்பு பாத குறடு

ஆணி செருப்பு

ஆத்தூர் அருகே வளையமாதேவிக்கும், மஞ்சினிக்கும் இடையே குன்னுடையான் கோயில் என்ற ஓர் கோயில் உள்ளது. அந்த கோயிலில் ஒரு ஆணி செருப்பு ஒன்று பார்த்தேன். இந்த மாதிரி ஆணி செருப்பு நீங்க பாத்திருக்கீங்களா..???
அது தொடர்பாய் இணையத்தில் தேடியபோது கிடைத்த செய்தி..ஓர் அறிவியல் விளக்கம்
காவடி தூக்கும்போது சிலர் ஆணிச்செருப்பில் ஏறி நடப்பார்கள். ஆணிச் செருப்பு என்பது மரத்தால் செய்யப்பட்ட செருப்பில், ஆணிகள் நெருக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும். ஆணிகளின் மேல் முனை, அதாவது கால்வைக்கும் பகுதி (பரப்பு) கூராக இருக்கும். கூர் ஆணிகள் மீது கால்வைத்து ஏறிநின்று, ஆணிச்செருப்பைப் போட்டுக் கொண்டே நடப்பார்கள்.
இதைப் பார்க்கின்ற பக்தர்கள், ஒரு ஆணி குத்தினாலே எவ்வளவு வலிக்கிறது, இரத்தம் வருகிறது. ஆனால், இவ்வளவு கூர் ஆணியில் ஏறி நடக்கிறாய் வலிக்கவில்லை; இரத்தம் வரவில்லை! எப்படி?



கூர்மையான ஆணிகளாக இருந்தாலும் அவை நெருக்கமாகவும், ஒரே மட்டமாகவும் இருப்பதால்தான் ஆணி காலில் குத்துவதில்லை. அதனால்தான் வலிப்பதில்லை, இரத்தம் வருவ-தில்லை. மாறாக ஒரேஒரு ஆணி மட்டும் இருந்து அதன்மீது ஏறினால் காலில் ஏறிவிடும். அதேபோல் நிறைய ஆணிகள் இருந்து, அதில் ஒரே ஒரு ஆணிமட்டும் உயரமாக இருந்தால், அந்தச் செருப்பில் ஏறும்போது அந்த ஆணி குத்திவிடும்.
ஆணிச் செருப்பு காலில் குத்தாமல் இருப்பதற்குக் காரணம், ஆணிகள் நெருக்கமாக அதிக அளவில் இருப்பதும், ஆணிகளின் கூர் ஒரே மட்டமாக இருப்பதுமே காரணம்.
ஒரே ஒரு கூர் ஆணியில் நாம் ஏறினால் நம் எடை முழுக்க அந்த ஆணியை அமுக்க, அந்த அழுத்தத்தில் கூர் ஆணி காலில் ஏறிவிடும். நிறைய ஆணிகள் சமமாக இருந்து அதில் ஏறும்போது நம் எடை எல்லா ஆணி-களிலும் சமமாகப் பகிர்ந்து போகிறது. எந்த ஒரு தனி ஆணியிலும் கால் பதிவதில்லை. அதனால் ஆணிச் செருப்பு குத்துவதில்லை.